Saturday, May 19, 2012

கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்


கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்

நீ உண்மையிலேயே உலகிற்கு நன்மை / சேவை செய்ய விரும்புகிறாயா?

அப்படி செய்ய முடியாமல் போனதிற்காக வருந்துகிறாயா?

அப்படியானால் நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ணி கொண்டிரு ,
அதாவது கஷ்டபடுகிறவர்களுக்கு என்னனென உதவிகள் தேவையோ அதை பற்றி எண்ணி கொண்டிரு.


பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது 

மக்களுக்குள் மிகவும் துயவர்கழகும் வரை மேலும் மேலும் அது நம்மை தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது .

தொடர்ந்து புனிதமான  எண்ணங்களை சிந்தித்தபடி நன்மை செய்து கொண்டே இரு , தீய விஷயங்கள் நமக்குள் தலைக்காட்டாதபடி அழுத்திவைக்க அதுதான் வழி .

நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சம தன்மை அடைகிறது , பின்பு அது வித்து வடிவத்தை பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சம உடலில் வாழ்கிறது , மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு அது வெளியே வந்து தனக்கு உரிய பலன்களை தருகிறது , இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது இவ்விதமே மனிதன் தனக்கு தானே வாழ்க்கையை உருவாக்கி  கொள்கிறான் .

உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும் 

உன்னால் முடிந்த வரை நல்ல எண்ணங்களையே எண்ணு, உலக நன்மையின் பொருட்டு அந்த எண்ணம் யாரால் செயல்படுத்த முடியுமோ அவர்கள் மனதில் தோன்றி அது (உன் எண்ணம் ) செயலுக்கு வந்து விடும் , (செயல்படுதலை )
குறித்து வருந்தாதே .

                                                                                   --விவேகானந்தர்

No comments:

Post a Comment